வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா…

(UTV|MIYANMAR)-மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ராணுவத்தினர் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.

மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான வேட்டை தீவிரமானது. இதைத்தொடர்ந்து, மியான்மரில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
இது திட்டமிட்ட இனப்படுகொலை என ஐ.நா. சபை அறிவித்தது.
இந்நிலையில், ரோஹிங்கியா விவகாரத்தில் தலையிட தவறிய காரணத்துக்காக மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் நேற்று ரத்து செய்தது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Railway Trade Unions withdraw once a week strike

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்