சூடான செய்திகள் 1வணிகம்

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலை பற்றி தீர்மானம் எட்டப்பட்டது.

இதன் பிரகாரம் ஒரு கிலோ சம்பா 108 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டரிசி 88 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும். எந்தத் தினத்திலிருந்து கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவது என்பது பற்றி விரைவில் தீர்மானிக்கப்பட உள்ளது.

அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியையும் 15 ரூபாவால் அதிகரிப்பதென வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் இரு வாரங்களுக்குள் அமுலாக்கப்படும். இதன் மூலம் சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என வாழ்க்கைச் செலவுக் குழு அறிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை