கேளிக்கை

இசைப்புயலின் 99 Songs ரிலீஸ் திகதி இதோ…

(UTV|INDIA) இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் விரிவான இசைத்திறமையால் பல சாதனைகள் செய்து வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களை பெற்று அவருக்கு பல மொழி சினிமாக்களிலும் பிசியாக இருக்கிறார்.

விஜய் 63 படத்தில் கமிட்டாகியுள்ள அவர் தற்போது டிவிட்டர் தளத்தில் தன் பக்கத்தில் ஒரு சுவாரசியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் நான் முதன் முதலாக ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள 99 படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

இது இளமையான, மனதுக்கு நெருக்கமான லவ் ஸ்டோரி. என்னுடைய YM தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் பார்ட்னராக பங்கெடுத்துள்ளது.

மேலும் 99 Songs படம் உலகில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மும் மொழிகளில் வரும் ஜூன் 29, 2019 ல் வெளியாகவுள்ளது. எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என கூறியுள்ளார்.

 

 

Related posts

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..

நடிகர் நகுலுக்கு வாரிசு

நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்