சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று(01) முதல் 3 ஆம் திகதி வரை தொடருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!