சூடான செய்திகள் 1

உலக சிறுவர் முதியோர் தினம் இன்று

(UTV|COLOMBO)-1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டது. அந்த சாசனத்திற்கமைய, சட்டத்தின் மூலம் குறைந்த வயதில் முழுமையடைந்தாலேயொழிய 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.

இதேவேளை, உலக வயோதிபர் தினமும் இன்றாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாம் அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்கு பெற்றுத் தந்த வயோதிபர்களை கௌரவத்துடன் நன்றி கூற வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்