வகைப்படுத்தப்படாத

கடலில் விமானம் வீழ்ந்து விபத்து

தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று இன்று(28) அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் எமிலியோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Air Niugini Boeing 737-800 எனும் விமானம் அந்நாட்டு நேரப்படி காலை 9.30 (2330 GMT) மணியளவில் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று தீவை சூழவுள்ள நீர்ப்பரப்பில் வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடலில் வீழ்ந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 47 பேரும் படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் பாரதூரமாக காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ட் மோர்ஸ்பியின் ஏர் நியூகினி விமான சேவை இது தொடர்பாக உடனடியாக எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.

எவ்வாறாயினும், பொலிசார் சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு சென்றிருப்பதாகவும், விரைவில் அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆராய முடியும் என்று பப்புவா நியுகினியாவின் விபத்து விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

සංචාරකයින්ගේ පැමිණීමේ වර්ධනයක්

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து