கேளிக்கை

பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம்?

(UTV|INDIA)-இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 1996 ல் செப்டம்பர் 23 ல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. ஆனால் இப்போது வரை அவரின் மரணம் மர்மமாக தான் உள்ளது. அண்மையில் அவருக்கு நினைவு நாள் வந்தது.

சில்க் 1995 ல் ராகதாளங்கள் படத்தை அவர் எடுத்திருந்தார். ஆனால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அண்மையில் இயக்குனர் திருப்பதி ராஜன் அப்படத்தை வெளியிட உதவுவதாக கூறினார். மேலும் அவர் தற்போது சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொள்ளவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில் என்னுடைய வீணையும் நாதமும் படத்திற்காக ஹீரோயினை தேடினேன். அப்போது என் நண்பர் இந்த விஜய லட்சுமியை (சில்க் ஸ்மிதா) அறிமுகப்படுத்தினார். அவருக்கு நான் தான் ஸ்மிதா என பெயர் வைத்தேன். அப்போதே வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் ஸ்மிதாவை நடிக்க வைக்க கேட்டனர்.

அவரின் வண்டிச்சக்கரம் படத்தின் சில்க் ரோலில் நடித்ததால் சில்க் ஸ்மிதா என அவர் பெயர் பெற்றார். பின் பிரபல நடிகையாக மாறி புகழின் சிகரத்தில் இருந்தார். இதனால் அவர் என்னை மறந்துவிட்டார். அவர் மீது கோபத்தில் நானும் இருந்துவிட்டேன். இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் அவர் என்னை பார்க்க விரும்புவதாக கால் வந்தது.

முதலில் போகவில்லை. பின்னர் நான் சில நாட்கள் கழித்து தான் அவரை படப்பிடிப்பில் சந்தித்தேன். கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பது தெரிந்தது. அப்போது தாடிக்காரர் ஒருவர் அவருக்கு ஆதரவாக இருப்பதை அறிந்தேன். சில்க் சில நாட்கள் அரசியல் வாதிகளின் பிடியிலும் அவர் இருந்தார்.

ஆனால் அவர் இறந்தது தற்கொலையால் அல்ல. கடைசி காலகட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தார். தான் இறந்து போகப்போகிறோம் என்பது 10 நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரியும். அவரை வைத்து பணம் சம்பாதித்து விட்டு இறுதி நேரத்தில் கையில் காசு கூட கொடுக்காமல் அவரை தெருவில் விட்டு விட்டனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடைசியாக சில்க் இருந்த போது அவருக்கு யார் என்ன கொடுமைகள் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரியும். அவரின் வாழ்க்கையை நான் புத்தகமாக எழுதி வருகிறேன் என கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சினிமாவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தேன்

புஷ்பாவாகவே மாறிய டேவிட் வார்னர்

மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாகும் அந்த பிரபல நடிகை…