(UTV|COLOMBO)-ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் வெலிகட மற்றும் அங்குனுகொலபெஸ்ஸ சிறைச்சாலைகள் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையின் அதிகாரிகளை பணியில் இட தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர், மங்கலிகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலை கைதிகள் மற்றும் வெளியாலோர் உடனான தொடர்புகளை கட்டுப்படுத்தவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், அதற்காக விசேட அதிரடிப் படை வீரர்கள் சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளினுல் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுபடுத்த பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிய கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]