சூடான செய்திகள் 1

வன விலங்குகளால் உணவு பொருட்களுக்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு ஒத்துழைப்பு

(UTV|COLOMBO)-வன விலங்குகளால் உணவு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க தயாராகவிருப்பதாக சர்வதேச உணவு கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளரை சந்தித்துள்ளார்.
இதன்போதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயிரிடப்படும் உணவுப் பயிர்கள், மரக்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் சுமார் 40 சதவீதமளவில் வன விலங்குகளினால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்களின் அறுவடை குறைவடைவதன் காரணமாக பொது மக்களுக்கு போஷாக்கான உணவு  வேளைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லாது போகின்றது.
இந்த விடயத்தில் விலங்குகளை பாதுகாத்தவாறே நிலையான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள் இது போன்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச உணவு கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்