சூடான செய்திகள் 1

யானை தந்தம் மற்றும் ​ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-தெமடகொட பகுதியில் கஜ முத்து என சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்த 4 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமடகொட பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 6 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் மருதானை மற்றும் பொரள்ள பகுதிகளில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் பனிமூட்டமான நிலை

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

சஹ்ரானின் மனைவி குண்டுத் தாக்குதலை தடுத்திருக்க முடியும்