சூடான செய்திகள் 1

இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம்

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மழையுடனான வானிலையால் டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை தெரிவுசெய்யப்பட்ட பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு

மன்னார் கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் பசு கரை ஒதுங்கியது.

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி