சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு எச்சரிக்கை!!!-டெங்கு நோய் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV|COLOMBO)-எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.

டெங்கு நோய்த் தாக்கம் மீண்டும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 44 பேர் டெங்கினால் பலியாகினர்.

அத்துடன் 38 ஆயிரத்து 565 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் 70 சதவீதம் குறைவடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோய்ப்பரவல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய DIG இருவர் நியமிப்பு…

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்