சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மூன்றாவது நாளாக மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று(24) இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதேவேளை, மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விடத்தல் தீவு சன்னார் கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மாந்தை பிரதேசம் மீன்பிடி, விவசாயம், பனை உற்பத்தி போன்றவற்றுக்கு சிறந்த இடமாக விளங்குகின்றது. அந்தவகையில், தமது பிரதேசங்களில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி சுயமாக உழைக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கான ஒரு வழிகாட்டியாகவும், புதிய சுயதொழில்களை எவ்வாறு உருவாக்குதல் போன்றவை தொடர்பிலும், மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வாக இந்தக் கருத்தரங்குகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் ரஹ்மான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி மொஹிடீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

வெலிக்கட சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சுணில் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மஹேந்திரனை ஆஜராக உத்தரவு