கிசு கிசு

சமந்தா நடிக்க கணவர் தடையா?

தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவே தொடர்ந்து புதிய படங்களிலும் நடித்துவருகிறார்.

சமந்தா நடிப்பில் சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் கடந்த வாரம் வெளியானது. சீமராஜாவை விட சமந்தா லீட் ரோலில் நடித்த யூடர்ன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வரும் சமந்தா, சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார். தற்காலிக ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பார் என கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை சமந்தா வெளியிடாமல் நாகசைதன்யா வெளியிட்டுள்ளதால் ஒருவேளை சமந்தா நடிப்பதற்கு அவரது கணவர் வீட்டில் தடை போடுகிறார்களா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மோடி இலங்கைக்கு

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

சரத்தின் முழியே இனவாதம் : பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாம்