சூடான செய்திகள் 1

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் தேசமானிய றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இடங்கள்

பெரியமடு கிழக்கு ஜாமிஉல் அக்சர் ஜும்மா பள்ளிவாசல் சுற்றுமதில்
பெரியமடு மேற்கு பள்ளிவாசல் சுற்றுமதில்
பெரியமடு மத்திய மகா வித்தியாலயம் நூலகம்
பெரியமடு கிழக்கு ஆரம்ப நெறி பாடசாலை நுழைவாயில்
பெரியமடு காயா நகர் பள்ளிவாயல் சுற்றுமதில்

மேலும் இந்நிகழ்வில் மாந்தை உப்புக்கூட்டுத்தாபன தலைவர் அமீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியேகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், வட மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனவ்வர், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் தேசிய மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட
இணைப்பாளர் முஜீப் ரகுமான், மற்றும் மாந்தை இணைப்பாளர் சனூஸ் ஆகியோரும் மாதர் சங்கம் மீன்பிடி சங்கம் கிராம மக்கள் போன்ற பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வறுமையால் தொற்று நோய்கள் பரவுகிறது – ஜனாதிபதி

சஹ்ரானின் உறவினர் கட்டுபொத்த பகுதியில் கைது

பேரூந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுத்தால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வோம்…