சூடான செய்திகள் 1

இன்று முதல் போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு

(UTV|COLOMBO)-ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கைக் கூடம் அமைக்கப்படும்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட நடவடிக்கைக் கூடம் இயங்கவுள்ளது. இது இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படும். தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

பொதுமக்கள் தொலைபேசி மூலம் விசேட நடவடிக்கைக் கூடத்தைத் தொடர்புகொண்டு பாதுகாப்பான முறையில் தகவல் அறிவிக்கலாம். அழைக்க வேண்டிய இலக்கங்கள் 0113 024 803, 0113 024 815, 0113 024 820, 0113 024 848, 0113 024 850 ஆகியவையாகும்.

பக்ஸ் மூலம் தகவல் அறிவிக்க 0112 472 757 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்

உலகளாவிய ரீதியில் FACEBOOK இன் சேவை செயலிழப்பு