வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் சீனா

(UTV|CHINA)-உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் தொடர்வதால் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு சீனாவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக துணை பிரதமர் லியு ஹி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SC appoints Judge Bench to consider petitions against Pujith, Hemasiri

Ten FR petitions filed against death penalty

ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு