கேளிக்கை

திரைக்கு வரும் சில்க் சுமிதாவின் படம்…

(UTV|INDIA)-சில்க்சுமிதா 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர். கடந்த 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார்.

அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் இதுபற்றி கூறும்போது ‘1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம் ஆனார்.

அவர் நடித்த கடைசி படம் இதுதான். 1995-ல் இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆனது. எனவே ரிலீஸ் செய்ய முடியவில்லை. இப்போது ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளேன்’ என்றார். சில்க்கு சுமிதாவின் மரணம் பற்றி கேட்டபோது ‘அவரது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை. அதுபற்றி விசாரித்தால் மழுப்பி விடுவார்.

தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னை பார்க்க வர சொன்னார். ஆனால் சிலர் என்னை விடவில்லை’ என்று கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சானியாவுடன் டென்னிஸ் விளையாடாமல் சென்ற சுஷாந்த்

என் தந்தை கட்சியில் சேர வேண்டாம் – விஜய்

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?