வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நீடிப்பு…

(UTV|AMERICA)-உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது.

சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது.

ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக பற்றாக்குறையை சரிகட்டுவதற்கு, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என தெரிய வந்து உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

මාතලේටත් නව මහාධිකරණයක්

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது

கிருலபனை காவற்துறையின் துணை ஆய்வாளர் கைது