கேளிக்கை

96 ரீமேக்கில் பாவனா…

(UTV|INDIA)-கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான நவீன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார் பாவனா. சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் ஆகிறது. இதில் திரிஷா வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பாவனா கூறுகையில், ‘பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்க நான் விரும்புவதில்லை.

காரணம், ஏற்கனவே நடித்த நடிகையுடன் இப்போது என்னையும் சேர்த்து ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால், 96 படத்தின் கதை அனைத்து மொழி படங்களுக்கும் உரிய கதை. அதனால்தான் திரிஷா வேடத்தில் நடிக்க சம்மதித்தேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்றார். விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடிக்கிறார். பிரீத்தம் குப்பி இயக்குகிறார்.

 

 

 

 

 

Related posts

மக்களை சிரிக்க வைத்த நடிகர் தவக்கலைக்கு சினிமாவே எமனான கதை

மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற மாணவி

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்