சூடான செய்திகள் 1

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயத்தில், பொலிஸ் உயரதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளமைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா நேற்றுமுன்தினம்(12) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியைக் கொலை செய்ய சில சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பத்தரமுல்ல, செத்சிறிபாய முன்னாலுள்ள வீதிக்கு பூட்டு

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த