வகைப்படுத்தப்படாத

கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கியது புளோரன்ஸ் புயல்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசுகிறது. ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தினால் படகு குழாம்கள் சேதமடைந்துள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

´ஜீடி´ கைது

මත් පෙති 2952 ක් සමග පුද්ගලයෙක් අත්අඩංගුවට

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்