சூடான செய்திகள் 1

மனித புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணிகள்

(UTV|MANNAR)-இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தொடர்ச்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன.

​நேற்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளுக்கு ஏற்ப தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாமல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தற்போதும் விஷேட பேச்சுவார்த்தை

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!