சூடான செய்திகள் 1

நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்-சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நிலவும் வறட்சியுடன் காலநிலை சில பிரதேசங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலவும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களுக்கு உட்பட 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், புத்தளம், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பில்

களுத்துறையில் வீர நடைப் போட்ட அ.இ.ம.கா

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு