கேளிக்கை

கிண்டல் செய்பவர்கள் மீது நித்யாமேனன் கடும் கோபம்

(UTV|INDIA)-மாலினி 22 பாளையம்கோட்டை, காஞ்சனா 2, ஒ காதல் கண்மணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நித்யாமேனன். இவர் தன்னைப்பற்றி கிண்டல் செய்பவர்களுக்கு துணிச்சலாக பதில் அளித்து அவர்களை வாயடைக்கச் செய்து வருகிறார். சமீபத்தில் தன்னைபற்றி இணைய தளத்தில் கமென்ட் வெளியிட்டவர்களுக்கு அதே பாணியில் பதில் அளித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக நித்யா மேனன் வெயிட் போட்டு குண்டாக காணப்படுவதாகவும், உயரம் குறைவாக இருப்பதாகவும் கேலி பேசிய வண்ணம் இருந்தனர். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது உர்ரானார். ‘நான் உயரம் குறைவாக இருப்பதாலோ குண்டாக இருப்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

எனது வாழ்க்கையை பற்றி நான் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறேன். என்னை கிண்டல் செய்பவர்களை கண்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனென்றால், வேலையற்றவர்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பார்கள். பிஸியாக இருக்கும் யாரும் மற்றவர்களை பற்றிய சிந்திக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள்’ என கோபமாக பதில் அளித்தார் நித்யாமேனன்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

 

Related posts

சிவனுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!

சுஷாந்தின் கடைசி படம் வெளியாகும் திகதி அறிவிப்பு