வகைப்படுத்தப்படாத

தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து

(UTV|INDIA)-தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து நேரிட்டது.

இந்த விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 30 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது

Brazil’s President Bolsonaro offers US ambassador job to son

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் பதவி நீக்கம்