கேளிக்கை

சோனாலி பிந்த்ரேவிற்கு விக் அனுப்பிய ஹீரோயின்

(UTV|INDIA)-‘காதலர் தினம்’ படத்தில் நடித்தவர் சோனாலி பிந்த்ரே. அப்படத்தில் அவரது நடிப்பும், அழகும் பாராட்டு பெற்றது. பல்வேறு இந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு மெசேஜ் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சோனாலி. கேன்சரால் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் குணம் அடைய பிரார்த்திப்பதாக ஆறுதல் கூறி மெசேஜ் பகிர்ந்தனர்.
அமெரிக்காவில் தங்கி கேன்சர் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வரும் சோனாலி சமீபத்தில் தனது தலை முடியை முற்றிலுமாக ஷேவ் செய்து மொட்டை தோற்றத்துக்கு மாறினார்.

அவரது தோற்றத்தை கண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, ‘உனது அழகான கூந்தலை நீ இழந்திருப்பது மன வருத்தம் அளிக்கிறது’ என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியதுடன் அமெரிக்காவில் உள்ள பிரபல விக் நிறுவனம் ஒன்றில் சோனாலிக்காக ஸ்பெஷலான விக் ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட சோனாலி, பிரியங்கா சோப்ராவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் எந்நேரமும் தலையில் விக் அணிந்திருக்காமல் மொட்டை தோற்றத்துடன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘சர்தார்’ கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது

தளபதி 65 பட பூஜை [PHOTOS]

சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்