வணிகம்

பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அல்பா-லைனர் அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் கொள்கலன் ஏற்றி-இறக்கல் மூலம் கொழும்பு துறைமுகம் 15.6 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது.

இதுவரை இந்த கொள்கலன்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளில் சிங்கப்பூர் துறைமுகமே முன்னிலை வகித்து வந்துள்ளதுடன், கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இது 11 தசம் 6 சதவீத வளர்ச்சியையே காட்டியுள்ளது.

இதன்படி சிங்கப்பூர் துறைமுகம் 2ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 8.6 சதவீத வளர்ச்சியைக் காட்டும் கொன்சூ துறைமுகம் 3ம் இடத்தைப் பெற்றுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சமுத்திர சேவைகளுடன் சம்பந்தப்பட்ட துறைமுக செயற்பாடுகள் முனைய வழிநடத்தல் செயற்பாடுகள், சேவை விநியோக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அல்பா-லைனர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு