வகைப்படுத்தப்படாத

ஏவுகணை இல்லாத ராணுவ அணிவகுப்பு – பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்ட் டிரம்ப்

(UTV|NORTH KOREA)-வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறும்.

அதையொட்டி நடைபெறுகின்ற இராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். இராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

நேற்று காலை ஆரம்பமான விழாவில் இராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை எனவும், பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஏவுகணைகள் இல்லாமல் ராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மஹதிர் மொஹமட் தலைமையிலான கூட்டணி வெற்றி

மாபோல நகரசபையினால் வீடுகளில் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொள்வனவு

හෙට අගවිනිසුරු ජයන්ත ජයසූරිය මහතාව කෝප් කමිටුට හමුවට කැඳවයි