வகைப்படுத்தப்படாத

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

(UTV|BANGLADESH)-வாங்காளதேசத்தில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கிளை திறப்பு விழா தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது. திறப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் ஷேக் ஹசினா உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் வங்காளதேசத்தின் வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது உள்ளூர் மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக எல்லையை திறந்து விட்டோம். லட்சக்கணக்கான அகதிகள் தங்குவதற்கு வசதியாக முகாம்கள் அமைத்து கொடுத்தோம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 7 லட்சத்திற்கும் மேலான அகதிகள் மியான்மரில் இருந்து வாங்காளதேசத்திற்கு வந்துள்ளனர். அவர்களை பராமரிக்க வங்காளதேச அரசுக்கு சிரமமாக உள்ளது. இப்போது மியான்மரில் சுமூக நிலை திரும்பியுள்ளதால் அகதிகள் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். எனவே ரோகிங்யா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப உலக நாடுகள் அனைத்தும் மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வங்களதேசம் மற்றும் மலேசியாவில் உள்ள அகதிகள் இரண்டு மாதத்தில் மீண்டும் நாடுதிரும்ப கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජපානයේ සජීවකරණ චිත්‍රාගාරයක ගින්නකින් විසිතුන්දෙනෙකු මරුට

Ginigathhena landslide Tragedy: Body of missing shop owner recovered

තැපැල් වර්ජනය තවදුරටත්