சூடான செய்திகள் 1

கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இந்தவார இறுதியில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான, கூட்டு ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இந்தவார இறுதியில் நடைபெறலாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன், கடந்த மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கபாட்டின்றி நிறைவு பெற்றதுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை குறித்த திகதியும் அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதலாளிமார் சம்மேளனத்திற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரான முத்து சிவலிங்கத்தினால், பேச்சுவார்த்தை தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த கடிதத்திற்கான பதில் இந்த வாரமளவில் கிடைக்கும் எனவும், அதற்கமைய பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிணைமுறி மோசடி விவகாரம்; தொலைபேசி உரையாடல் அறிக்கை பெற உத்தரவு

நோன்மதி போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை

ஊடகவியலாளர் மேரி கொல்வின்னின் படுகொலைக்கான காரணம் வெளியானது…