(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி இன்று(07) அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகள் எவையும் இயங்காது பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
மேற்படி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத்திட்டம் அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]