கேளிக்கை

என்னால ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் பேச முடியும்

(UTV|INDIA)-சிம்புவுக்கு ஒரு மேடை கிடைத்துவிட்டால் மணிக்கணக்கில் பேசுவார் என்பது தெரிந்ததே. அவரது பேச்சில் மனம் திறந்த உண்மை இருக்கும் என்பதால் அவரது பேச்சு காரசாரமாக இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட சிம்பு நேற்று முன்தினம் நடைபெற்ற ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெகு குறைவாக அமைதியாக பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜோடி ஜோடியாக நடித்த அரவிந்த்சாமி – அதிதிராவ், அருண் விஜய் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பின்னர் சிம்பு-டயானா ஜோடி மேடையேறியது. இந்த விழாவில் சிம்பு பக்கம் பக்கமாக பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சிம்பு பேசியதாவது:

“நான் ஒரு வார்த்தைதான் பேச வந்தேன் ‘நன்றி மணி சார்’. நான் காண்டிப்பா பேசுவேன், நான் பேசுவேன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா இப்போ பேசுறதவிட. இயக்குனர் மணிரத்னம் எடுத்துள்ள இந்த படம் பேசும். அதுக்கப்புறம் நான் பேசுறேன் என்று கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டார். சிம்பு அதிகம் பேசவில்லை என்று அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் சிம்பு தற்போது அதிக பக்குவம் அடைந்துவிட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘ஜகமே தந்திரம்’

ஸ்ருதியின் வாழ்நாள் கனவு பலித்தது

காதலரை மணந்தார் பாவனா