வகைப்படுத்தப்படாத

கணவரை மோசமாக விமர்சித்த பத்திரிக்கை ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம்

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது சம்பந்தமாக தலையங்க கட்டுரை ஒன்று வெளியிட்டது.

இந்த கட்டுரையில் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். அதில், டிரம்பின் இரக்கமற்ற தன்மை, வெளிநாட்டு வி‌ஷயங்களில் தெளிவில்லாமல் எடுக்கும் மோசமான நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சனைகள் ஆகியவற்றில் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அமெரிக்காவின் மூத்த நிர்வாகிகள் டிரம்பின் நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று அப்பத்திரிக்கையின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த கட்டுரையை எழுதிய பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

பேச்சு சுதந்திரம் என்பது நமது நாட்டின் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஒரு முக்கியமான தூணாகும், மேலும் ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிகைகள் நியாயமாகவும், நடுநிலையாகவும், பொறுப்பாகவும் இருகக் வேண்டும்.

ஆனால், பெயரே இல்லாதவர்கள் எல்லாம் நமது நாட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள்.

எழுத்தில் வார்த்தைகள் மிகவும் முக்கியம், யாரேனும் துணிச்சலாக குற்றச்சாட்டுகளை கூறும்போது தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தி அதில் அவர்களின் வார்த்தைகளை நிலைநிறுத்த வேண்டும். இல்லையேல் அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தும்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த எழுத்தாளரை நோக்கி கூறுகிறேன், நீங்கள் நமது நாட்டை பாதுகாக்க முயற்சிக்கவில்லை, மாறாக உங்களின் கோழைத்தனமான செயல்பாடுகளினால் நாட்டை நாசப்படுத்துகிறீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹங்வெல்லயில் இடம்பெற்ற பதறவைக்கும் கொள்ளை

நிவாரணப்பொருட்களுடன் சீனக்கப்பல்

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை