(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் இன்று(07) அரசியலமைப்பு சபையில் முன்னிலையாகவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் நிலவுகின்ற முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் இருதரப்பும் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சபையின் தலைவர், சபாநாயகர் கருஜெயசூரியவின் அழைப்பின் பேரில் அவர்கள் முன்னிலையாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 10 உறுப்பினர்களும் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]