வணிகம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

(UTV|COLOMBO)-உள்நாட்டுக் கிழங்கு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (5) கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் லங்கா சதொச பெறுகை உத்தியோகத்தர்கள் கிழங்கு விவசாயிகளிடம் சென்று 1 கிலோ கிழங்கு 90 ரூபா வீதமும், கிழங்கு விவசாயிகளினால் லங்கா சதொசவிற்கு கொண்டு வந்து கொடுக்கப்படும் 1 கிலோ கிழங்கு 100 ரூபா வீதமாகவும், பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இவ்வாறு பெறப்படும் கிழங்கு ஒரு கிலோ லங்கா சதொசவினால் 115  ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. என்பதை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே போன்று மேற்கூறப்பட்ட விலைக்கு கிழங்கு விவசாயிகளிடம் கிழங்குகளை பெற்றுக்கொள்ளுமாறு ஏனைய தனியார் பிரிவின் சுப்பர் மார்க்கட் விற்பனை நிலையங்களிடமும் வாழ்க்கைச் செலவுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

எமது உள்நாட்டு கிழங்கு விவசாயிகளிடம் இடைப்பட்ட தரகர்களின் சுரண்டல்களை தடுத்து, உரிய விவசாயிகளிடமே கிழங்கை உரிய விலைக்கு பெற்றுக் கொள்கின்றமை ஊடாக சிறந்த விலையைப் பெற்றுக்கொடுப்பதே லங்கா சதொசவின் நோக்கமெனவும், அதே போன்று உள்நாட்டு கிழங்கு விவசாயிகளை ஊக்குவித்து அவர்களுக்கு சந்தையில் போட்டிகரமான இலாபத்தை பெற்றுக்கொடுப்பதற்கு பாவனையாளர்களுக்கு கிழங்கு விற்பனை செய்வதையும் எதிர்பார்ப்பாக கொண்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். இவ்வாறு பெறப்படும் கிழங்கு இலங்கை முழுவதும் அமைந்துள்ள 404 லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

.

ஊடகப்பிரிவு

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்