விளையாட்டு

ஓய்வு பெறும் ஆர்.பி.சிங்…

(UTV|INDIA)-இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் நேற்று(04) தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு செப்டம்பர் 04ம் திகதி அவர் முதன்முறையாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

சரியான 13 வருடங்களின் பின்னர், தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், 40 விக்கட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் 69 விக்கட்டுகளையும், 10 இருபதுக்கு – 20 போட்டிகளில் 15 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், ஐ.பி.எல் தொடரில் மொத்தமாக 80 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 90 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தன்னம்பிக்கையினை இழந்தாரா மேத்யூஸ்

ஆசிய கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி

இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு