சூடான செய்திகள் 1

மஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO)-2 கோடி ரூபா கையூட்டல் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கத்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய்களை அவர்கள் கையூட்டலாக கோரியுள்ளனர்.

அந்த தொகையின் முற்பணத்தை பெற்றுக் கொண்ட வேளையில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று(4) அவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு