வகைப்படுத்தப்படாத

ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை

(UTV|MYANMAR)-ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் செய்தி சேகரித்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கும் தேசிய இரகசிய சட்டம் ஒன்றின் கீழ் மியன்மார் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி கொடுத்த உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்திருந்ததற்காகவே வா லோன் மற்றும் கியாவ் சோ லூ இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், “தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய இரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இது பொலிஸாரால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் தாம் நிரபராதிகள் என்றும் இந்த இருவரும் தொடர்ந்து கூறிவந்தனர். இந்த வழக்கு விசாரணை மியன்மாரில் ஊடக சுதந்திரம் பற்றிய கேள்வியை எழுப்பி வந்தது.

“நான் பயப்படவில்லை” என்று இந்த இரு ஊடகவியலாளர்களில் ஒருவரான வா லோன் இந்த தீர்ப்பை பற்றி குறிப்பிட்டார். “நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நம்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்” என்றும் அவர் முன்னதாக கூறி இருந்தார்.

இந்த இருவரும் வடக்கு ரகைனின், இன் டின் கிராமத்தில் 10 ரொஹிங்கிய ஆண்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதன் ஆதாரங்களை சேகரித்தவர்களாவர்.

ரோய்ட்டர்ஸ் தரும் தகவல்களின்படி, ரோஹிங்கிய ஆண்கள் சிலர், கடற்கரையோரம் அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். அங்கு, அவர்களில் இருவரை பெளத்த கிராம மக்கள் கொன்றிருப்பதோடு ஏனையோர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவை நடந்தது கடந்த செப்டம்பர் மாதம்.

இந்த விசாரணைகளின் போது இவர்களுக்கு ஆவணங்களை வழங்க இரு பொலிஸ் அதிகாரிகள் முன்வந்தனர். அந்த ஆவணங்கள் வழங்கப்பட்ட விரைவிலேயே கடந்த 2017 டிசம்பரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரு ஊடகவியலாளர்களும் டிசம்பர் மாதம், இரண்டு பொலிஸாருடன் விருந்துக்கு சென்றுள்ளனர். அங்குதான் இவர்களுக்கு பொலிஸார் இந்த படுகொலை குறித்த ஆவணத்தை வழங்கியுள்ளனர்.

பின் அந்த உணவகத்திலிருந்து புறப்பட்ட உடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரக்கைன் மாநிலம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்புடைய முக்கியமான மற்றும் ரகசியமான அரசு ஆவணங்களை வைத்து இருந்தார்கள். இதனை வெளிநாட்டு ஊடகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இது முழுக்க முழுக்க பொலிஸால் ஜோடிக்கப்பட்டது என்று இந்த ஊடகவியலாளர்களின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் படுகொலை செய்தியை வெளியே கொண்டுவந்தார்கள். அதற்காக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரோய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர், “மியன்மாருக்கும், அதன் ஊடக சுதந்திரத்திற்கும் இன்று ஒரு மோசமான நாள்” என்றார்.

ரொஹிங்கிய ஆயுத கும்பல் ஒன்று பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரக்கைன் மாநிலத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த நெருக்கடியானது பல காலம் அங்கு நீடித்தது.

இராணுவம் ரோஹிங்கியர்களுக்கு எதிராக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ரக்கைன் மாநிலத்திற்கு செல்லும் ஊடகங்களை இராணுவம் கடுமையாக கண்காணிப்பதால் அந்த பகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை பெறுவது கடினமான காரியமாக உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

திருமணம் செய்துகொள்வதற்கான சட்டபூர்வ வயதெல்லை 18 ஆக உயர்வு…

ஜனாதிபதி இன்று நாடு திரும்புகின்றார்

Enterprise SL Exhibition in Anuradhapura today