சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது

(UTV|COLOMBO)-நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென கூறப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியினரின் நாளைய ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தை சுற்றிவளைப்பதாக சில பராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதனைத் தவிர்ப்பதற்கே நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளதென தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி

தோட்டத் தொழிளார்களை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் – சஜித்

8000 பாதுகாப்பு படையினர் அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில்