சூடான செய்திகள் 1

வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிப்பு

(UTV|COLOMBO)-பண வைப்புச் செய்தவர்களின் பணத்தை திரும்ப வழங்குவது சம்பந்தமான யோசனைகள் அடங்கிய திட்ட வரைவு ஒன்று இலங்கை மத்திய வங்கியிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக ஈடிஐ (ETI) நிறுவனம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனத்தை மீள்கட்டமைக்க அனுமதி வழங்குமாறு கோரி ஈடிஐ நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று(31) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனைக் கூறியுள்ளார்.

அதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் பதில் கிடைக்கும் வரை அந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.

அதன்படி குறித்த வழக்கை நவம்பர் மாதம் 01ம் திகதி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி ருவன் பெர்ணான்டோ, எதிர்ப்புக்கள் இருந்தால் அன்றைய தினம் முன்வைக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

JustNow: சிறைக்கு மாற்றப்பட்ட வசந்த முதலிகே!

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!