விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

(UDHAYAM, TOKYO) – 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் திட்டம் தம்மிடம் இல்லை என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களை வென்று போல்ட் சாதனைப் படைத்திருந்தார்.

எனினும் 2008ம் ஆண்டு அவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை, சக வீரரின் ஊக்கமருந்து பாவனையால் மீளளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அவர் ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களாக பெற்ற 9 பதக்கங்களில் ஒன்றை இழக்க நேர்ந்ததுடன், தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையும் அற்றுப் போனது.

இந்த நிலையில் அவர் 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொண்டு இந்த சாதனையை மீளப் படைப்பார் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

எனினும் இதனை அவர் மறுத்துள்ளார்.

Related posts

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்

தட்டிச் சென்றார் ‘ஜோகோவிச்’