சூடான செய்திகள் 1

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலளார் காங்கிரஸின் பொது செயலாளர் பதவியில் இருந்து ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகியுள்ளார்.

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இன்று (30) காலை இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்று முதல் தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

அத்தோடு, புதிய பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கைது செய்யப்பட்ட நாலகடி சில்வா விளக்கமறியலில்

மாரவில ஆதார மருத்துவமனையின் கனிஷ்ட ஊழியர்கள் எதிர்ப்பில்…

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு