விளையாட்டு

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

(UTV|WEST INDIES)-2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது முறையற்ற விதத்தில் பந்துவீசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடைக்குள்ளான மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரான்ஸ்ஃபோர்ட் பீடன் (Ronsford Beaton) மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியும் என சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

அவருடைய பந்து வீச்சு குறித்த திருத்தங்கள் மேற்கொண்ட இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று அது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, அவர் தற்போது 15 பாகைக்கு அமைய பந்து வீசுவதாகவும் அது சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரான்ஸ்ஃபோர்ட் பீடன் மீண்டும் முறையற்ற விதத்தில் பந்துவீசுவாரானால் அதுதொடர்பில் அதிகாரிகளுக்கு முறையிட முடியும் எனவும் சர்வதேச கிரிக்கட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

2020 ஒலிம்பிக் தகுதி பெற்றவர்கள் நேரடியாக பங்கேற்கலாம்

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி