(UTV|COLOMBO)-எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து, தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப்பதிவுசெய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 15 வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவுசெய்து அடையாளஅட்டையினை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்திற்கு 100 ரூபாவும், தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதியொன்றிற்கு 250 ரூபா மற்றும் காணாமல் போன தேசிய அடையாள அட்டையொன்றின் இணைப்பிரதியொன்றிற்காக 500 ரூபா ஆக கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த முடியாமைக்கான காரணத்தை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டணம் செலுத்துவதிலிருந்து விடுவிக்கும் உரிய சான்றிதழினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும் .
இது தொடர்பான மேலதிக தகவல்களை கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]