சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்ற முன்னிலையில்..

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று(24) சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்கான குறித்த வழக்கிற்கு காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், 61 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வழக்குடன் தொடர்புடைய 92 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது

இன்று ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதம்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை