சூடான செய்திகள் 1

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அந்த நாட்டிற்கு கையளிப்பதற்காக பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

வலிகாகம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போதும் இருக்கும் மயிலிட்டி மகாவித்தியாலயம் மற்றும் அதனை சூழவுள்ள காணிகளை 2 வாரங்களுக்குள் மக்களிடம் மீளவும் கையளிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

2009ம் ஆண்டுக்கு பின்னர் பாதுகாப்பு தரப்பினரிடமிருந்த மக்களுடைய காணிகளில் 82 வீதமான காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 12 வீதமான காணிகளே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுடைய காணிகளை ஒருபோதும் பாதுகாப்பு தரப்பினர் வைத்திருக்க முடியாது.

அதனை மக்களிடம் மீள வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியையும், இராணுவ தளபதியையும் அழைத்து கலந்துரையாடியுள்ளதாகவும், அந்த காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்,எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் பேச்சுவார்த்தை

கொழும்பிலுள்ள தந்தையை பார்க்க துவிச்சக்கரவண்டியில் சென்ற அட்டாளைச்சேனை சிறுவன் – பொலிஸாரினால் மீட்பு

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும்