சூடான செய்திகள் 1

பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுதாபம்

(UTV|COLOMBO)-இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி அட்டல் பிஹாரி வாஜ்பாயின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்து மூன்று தடவைகள் பிரதமராக கடமையாற்றிய வாஜ்பாய், நீண்டநாள் சுகவீனத்தை தொடர்ந்து தமது 93 ஆவது வயதில் நேற்று காலமானார்.

 

இன்று நாம் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட தலைவரையும், இலங்கையின் உண்மையான நண்பரையும் இழந்திருக்கின்றோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமரர் வாஜ்பாய் பூகோள புவியியல் அரசியல் நிலைமாற்றத்தில் இந்தியாவை சரியாக வழி நடத்தியவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது