சூடான செய்திகள் 1

மறைந்த இந்திய முன்னாள் பிரமருக்கு இரங்கல் செய்தி-சம்பந்தன்

(UTV|COLOMBO)-இந்தியா தனது ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஒரு சிறந்த அறிவாளியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பா​யை இழந்துள்ளதுள்ளது.

முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய், ஒரு மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார். மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை உணர்வு மிகுந்த ஒருவருமாவார்.

இந்திய பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் ஆற்றிய உரைகள் என்றைக்கும் நினைவிலிருக்கும். இந்திய மக்களுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய அரசினால் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

ஜனாதிபதி செயலகத்தில் சஜித் நாட்டு மக்களுக்கு கூறியது என்ன?

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது