விளையாட்டு

இந்தோனேசியாவில் உயர்தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்

(UTV|COLOMBO)-ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் குழாம் நேற்று  இந்தோனேசியாவிற்கு பயணமானது.

ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (18) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை நீச்சல் குழாத்தில் இடம்பெற்றுள்ள பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரியின் அகலங்க பீரிஸ் இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவராவார்.

அதற்கமைய, அவர் இந்தோனேசியாவிலிருந்தவாறு பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இந்த நாட்டு மாணவர் ஒருவர் வெளிநாட்டில் போட்டியிடும் அதேநேரம் பரீட்சை எழுதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

ICC விருதுகள் பரிந்துரையில் 4 இலங்கை வீரர்கள்

இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி..

அமெரிக்க மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை பெண்!!